இன்று வெறும் காலில் தான் நின்றுகொண்டு இருக்கிறேன்…. இளையராஜா

லண்டனில் தனது valiant சிம்பெனியை அரங்கேற்றிவிட்டு இசைஞானி இளையராஜா சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அமோக வரவேற்பு கொடுக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், ” அனைவருக்கும் நன்றி. நாங்கள் மலர்ந்து முகத்துடன் என்னை வழியனுப்பி வைத்ததால் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள் புரிந்தான். இது சாதாரண விஷயம் இல்லை. இசையை எழுதிவிடலாம், அதை சரியாக வாசிப்பது அவசியம். ஒவ்வொன்றையும் ஒரு மாதிரி வாசித்தால் யாருக்கும் புரியாது”.
”விதிமுறைகளை மீறாமல் பார்த்துகொண்ட மியூசிக் கண்டக்டரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு ஸ்வரத்தையும் பார்வையாளர்கள் மூச்சு விடாமல் பார்த்துகொண்டு இருந்தனர். சிம்பொனி மொத்தம் நாங்கு பகுதிகளை உள்ளடக்கியது. சிம்பொனியின் 4 மூவ்மெண்ட் முடியும் வரை யாரும் கை தட்ட கூட்டது என்பதே விதிமுறையாகும்”.
”ஆனால், அங்கு வந்திருந்த நம் ரசிகர்களும், பொதுமக்களும், முதல் மூவ்மெண்ட் முடிந்ததும் கைதட்டிகின்றனர். அங்கிருப்பவர்களுக்கு அது ஆச்சரியமாக இருந்தது.மியூசிக் கண்டக்டட் என்னை பார்த்து சிரிக்கிறார். இப்படி ஒவ்வொரு முவ்மெண்டுக்கும் கைதட்டி பாரட்டை கொட்டி தீர்த்தார்கள். அவ்வப்போது ரசிப்பதை அப்படியே வெளிப்படுத்தினார்கள். கரகோஷன் கொண்டு தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள்”.
”தமிழ் நாட்டிற்கும், இந்தியாவிற்க்கும் பெருமை சேர்க்கும் விதமாக இது அமைந்துள்ளது. முதல்வர் அரசு மரியாதையோடு என்னை வரவேற்றது என் நெஞ்சை நெகிழ வைக்கிறது. தமிழக மக்கள் என்னை வாழ்த்தி வரவேற்பது பெருமையாக உள்ளது. இந்த இசையை நீங்கள் பதிவிறக்கம் செய்து கேட்க கூடாது. நேரடியாக கேட்க வேண்டும். 80 வாத்திய கருவிகளையும் நீங்கள் கேட்க வேண்டும்”.
“சிம்பொனி இசை 13 நாட்டில் நடக்க உள்ளது. அதற்கான தேதி குறிக்கப்பட்டுவிட்டது. என்னை தெய்வம், கடவுள் என சொல்லும்போது, இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிவிட்டீர்களே என்று தான் தோன்றும். இந்த இசை உலகம் முழுவதும் கொண்டுபோய் சேர்க்கப்படும்”.
“82 வயதாகிவிட்டது இவர் என்ன செய்யப்போகிறார் என நினைக்காதீர்கள். நீங்கள் சொல்லும் அளவில் நான் இல்லை. பண்ணை பூரத்தில் புறப்படும் பொழுது வெறும் காலில் நடந்தேன், என்னுடைய காலில் தான், வெறும் காலில் தான் இன்று இந்த இடத்தில வந்து நின்றுகொண்டு இருக்கிறேன்” என இளையராஜா பேசியுள்ளார்.