ஹமாஸ் அமைப்புடன் இரகசிய பேச்சுவார்த்தையில் அமெரிக்கா

பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸ் அமைப்பினருடன் அமெரிக்கா இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல் உண்மையாக இருக்குமாயின் 1997 ஆம் ஆண்டின் பின்னர் ஹமாஸ் அமைப்புடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஹமாஸ் தடுத்துவைத்துள்ள 59 பணயக்கைதிகளில் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஐவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹமாஸ் அமைப்பிடம் உள்ள அனைத்து பணய கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிகை விடுதிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 4 times, 4 visits today)