சர்ச்சைக்குரிய காட்சியில் ஜோதிகா… வைரலாகும் புகைப்படம்

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் தமிழில் உடன்பிறப்பே எனும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்திருந்தது.
இதை தொடர்ந்து மலையாளத்தில் காதல் தி கோர் படத்தில் மம்மூட்டி உடன் இணைந்து நடித்திருந்தார். இதன்பின் தற்போது பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு சைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய திரைப்படங்கள் இந்தியில் வெளிவந்திருந்த நிலையில், இந்த ஆண்டு Dabba Cartel எனும் வெப் தொடர் வெளியாகியுள்ளது.
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளிவந்துள்ள இந்த வெப் தொடரில் பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். அதில் ஒருவராக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிகை ஜோதிகா நடித்துள்ளார்.
இந்த நிலையில், Dabba Cartel வெப் தொடரில் சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடிகை ஜோதிகா நடித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.