விஜய்யை மடக்கப்பார்த்த பிரதீப்… ஒரு சில வருடங்களில் நிச்சயம் படம் வரும்

டிராகன் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பார்த்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்திற்கு பிறகு இவர் நடித்த டிராகன் படமும் ஹிட் என்பதால் தற்போதைக்கு இவர் டாப் ஹீரோ லிஸ்டில் இருக்கிறார்.
எந்த பக்கம் திரும்பினாலும் பிரதீப் ரங்கநாதன் பேட்டி தான். சமீபத்தில் இவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
அதற்கு காரணம் இவர் கொடுத்த அப்டேட் தான். லவ் டுடே படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரதீப் நடிகர் விஜய்க்கு ஒரு கதை சொல்லி இருக்கிறார்.
அதுவும் சயின்ஸ் பிக்சன் திரைப்படம். சில காரணங்களால் விஜய் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.
ஆனால் இந்த கதையை படமாக்க வேண்டும் என்பதில் ரொம்பவே உறுதியாக இருக்கிறார். மேலும் இந்த படத்தில் அவரே ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறாராம். தற்போது இல்லை என்றாலும் ஒரு சில வருடங்களில் இந்த படத்தை எடுப்பேன் என்று சொல்லி இருக்கிறார்.