காதலை மிக அழகாக வெளிக்கொண்டு வந்த VTV-க்கு 15 வயது…

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு, த்ரிஷா நடிப்பில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம், கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
மனதிற்கு நெருக்கமான காதல் படங்களின் பட்டியலில், இன்றளவும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு தனி இடமுண்டு.
இந்நிலையில், இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நடிகர் சிம்பு, தயாரிப்பாளர் விடிவி கணேஷ் இணைந்து சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மேலும் அந்த வீடியோவின் இறுதியில் விடிவி கணேஷ் சிம்புவிடம், “இங்க என்னா சொல்லுது ஜெஸ்ஸி ஜெஸ்ஸி சொல்லுதா.. அது மட்டும் தான் அவர் காது கேக்குது” என சொல்ல அதை மறுத்த சிம்பு, “இப்போல்லாம் ஜெஸ்ஸி சொல்றதில்ல.. வேற ஒன்னு சொல்லுது.. அப்புறமா சொல்றேன்” என்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
#15yearsofVTV
pic.twitter.com/ElyfgVNtfm
— Silambarasan TR (@SilambarasanTR_) February 26, 2025