அமெரிக்காவில் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற பெண் : காண முடியாமல் தவிக்கும் குடும்பத்தினர்!

அமெரிக்காவில் இடம்பெற்ற விபத்தொன்றில் இந்திய மாணவி ஒருவர் கோமா நிலைக்கு சென்றுள்ள நிலையில், அவரை பார்வையிட குடும்ப உறவினர்கள் மத்திய அரசின் உதவியை நாடியுள்ளனர்.
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த நீலம் ஷிண்டே, பிப்ரவரி 14 ஆம் தேதி கலிபோர்னியாவில் விபத்துக்குள்ளானார்.
இந்த விபத்து தொடர்பில் கடந்த 16 ஆம் திகதி தகவல் கிடைத்ததாகவும், அன்றில் இருந்து அமெரிக்கா செல்ல விசாவிற்கு முயற்சித்து வருவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த மாணவியின் தந்தை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் உதவியை நாடியுள்ளார்.
“இது ஒரு கவலையளிக்கும் பிரச்சினை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதைத் தீர்க்க உதவ வேண்டும்,” என்று அவர் கூறினார்.
மாணவி நீலம் ஷிண்டே அமெரிக்காவில் விபத்தில் சிக்கி உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் மகாராஷ்டிராவின் சதாராவைச் சேர்ந்த அவரது தந்தை தனாஜி ஷிண்டே, மருத்துவ அவசரநிலை காரணமாக தனது மகளை அவசரமாகப் பார்க்க வேண்டும். என கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.