இந்த ரேஞ்சுக்கு போன தனுஷின் NEEK படத்தின் நிலை என்ன?

தனுஷ் கடந்த ஆண்டு தன்னுடைய 50-ஆவது படத்தை இயக்கி இருந்தார். வடசென்னை பகுதியில் நடக்கும் கதைக்களத்தில் உருவான இந்த படத்தில், தனுஷுக்கு ஜோடியாக யாரும் இல்லை என்றாலும், இதுவரை ஏற்று நடித்திடாத வித்தியாசமான தோற்றத்தில் பார்க்கப்பட்டார்.
மேலும் இந்த படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்து இந்த படத்தை ஹிட் படமாக மாற்றியது.
இதை தொடரந்து தற்போது தனுஷ், தன்னுடைய மூன்றாவது படமாக இளவட்ட நடிகர்களை வைத்து இயக்கிய திரைப்படம் தான், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்’.
எதார்த்தமான ஒரு காதல் கதையில், பெரிதாக எந்த ஒரு ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த படம், பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியான நிலையில், இந்த படம் முதல் நாளில் ரூ.1.5 முதல் ரூ.2 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது.
தற்போது இந்த படத்தின் இரண்டாவது நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. திரைப்படங்களில் வசூல் நிலவரத்தை கணித்து கூறும், Sacnilk நிறுவனத்தின் தகவல் படி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் இரண்டாவது நாளில் முதல் நாளை விட குறைவான வசூலையே பெற்றுள்ளதாம். அதன்படி இந்த படம் 2-ஆவது நாளில் ரூ.1 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் வசூல் மோசமாகி வருவதால், இப்படம் தனுஷ் இயக்கத்தில் வெளியான முதல் பிளாப் படமாக அமைந்து விடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிரிபார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தில், தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக நடிக்க, அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடித்திருந்தார்.
மேலும் மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், சரத்குமார், நரேன், சரண்யா பொன்வண்ணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.