பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இரு படங்கள்… வெற்றியது யார்?

இன்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராகன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது. இரண்டு படத்திற்குமே கடுமையான போட்டி இருந்தது.
தனுஷ் இயக்கி தயாரித்திருந்த NEEK படத்தில் இளம் பட்டாளங்கள் நடித்திருந்தனர். ஏற்கனவே பாடல்கள் ஹிட்டானதால் படத்தை பார்க்கும் ஆவல் ரசிகர்களிடம் இருந்தது.
அதேபோல் லவ் டுடே வெற்றிக்குப் பிறகு பிரதீப் நடிக்கும் டிராகன் படத்துக்கும் பெரும் ஆர்வம் இருந்தது.
இந்த அலப்பறைகளுக்கு நடுவில் இன்று வெளியான இந்த இரண்டு படங்களில் டிராகன் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
அதன்படி ஏற்கனவே டிக்கெட் புக்கிங்கில் படம் 1.5 கோடி வரை வசூலித்திருந்தது. அதை தொடர்ந்து இன்றும் தியேட்டர்களில் நல்ல கூட்டம் இருக்கிறது.
அதனால் முதல் நாள் வசூல் நிச்சயம் 8 முதல் 10 கோடி வரை இருக்கும் என்கின்றனர். அதேபோல் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.
இருந்தாலும் எதிர்பார்த்ததை விட குறைவு தான். அதன்படி இப்படத்தின் முதல் நாள் வசூல் 5 முதல் 7 கோடி வரை வரலாம் என கணிப்புகள் சொல்கின்றன.
இந்த நிலவரம் சனி ஞாயிறுகளில் நிச்சயம் ஏற்ற இறக்கமாக இருக்கும். இதில் டிராகன் படம் இளைஞர்களால் கொண்டாடப்படுவதால் நிச்சயம் 100 கோடி கிளப்பில் இணைந்து விடும் என விமர்சகர்கள் கணித்துள்ளனர்.