காதலனால் வந்த சோகம்… இலங்கை சென்றதால் அனைத்தையும் இழந்த அசினின் கதை தெரியுமா?

குறுகிய காலகட்டத்திலேயே அஜித், விஜய், கமலஹாசன், சல்மான் கான், அக்ஷய் குமார் என அத்தனை டாப் ஹீரோக்களுடனும் அசின் கைகோர்த்தார்.
அப்படி ஏறுமுகத்தில் இருந்த அசினின் கேரியர் சட்டென சரிந்ததன் காரணம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நடிகை அசின் பாலிவுட் பக்கம் போனதும் பாலிவுட் நடிகர் நித்தின் முகேஷ் என்பவரை காதலித்தார்.
அந்த சமயத்தில் அசின் சல்மான் கானுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தார்.
இதனால் கோபமடைந்த நித்தின் முகேஷ் மீடியாக்கள் முன்னிலையில் அசின் ஒரு மோசடி காரி, நாங்கள் இருவரும் டேட்டிங் செய்தோம் என உடைத்து விட்டார்.
இதனால் இவர்களுடைய காதலும் பிரிந்தது. இதைத்தொடர்ந்து ஜாபா என்னும் படத்திற்காக அசின் இலங்கை படப்பிடிப்பிற்கு சென்றிருந்தார்.
அந்த சமயத்தில் தமிழ் சினிமா நடிகர்கள் யாருமே இலங்கையில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த சமயத்தில் அசின் இவ்வாறு செய்ததால் தமிழ் சினிமா அவரை மொத்தமாக ஒதுக்கி விட்டது. அசினுக்கு கடைசி வரைக்கும் வாய்ப்பு கொடுத்தது என்னவோ சல்மான் கான் தான்.
ஒரு பேட்டியில் சல்மான் கான் பற்றி கேள்வி கேட்க, நானும் அவரும் சாதாரண நண்பர்கள் தான், அவர் எனக்கு பெரிய அளவில் எந்த உதவியும் செய்யவில்லை என்று பேசி இருந்தார்.
அதன் பின்னர் சல்மான் காணும் அசினை கழட்டி விட்டு விட்டார். அதன் பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு ராகுல் என்ற பிசினஸ்மேனை திருமணம் செய்து கொண்டார்.