தரை மட்டமாக்கப்பட்டது விஜய்யின் தவெக கட்டிடம்

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க நடிகர் விஜய்க்கு கொடுக்கப்படும் நெருக்கடியும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.
கேப்டன் விஜயகாந்த் தன்னுடைய அப்பா அம்மா நினைவாக ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தை கட்டியிருந்தார்.
ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டதாக சொல்லி மண்டபத்தின் ஒரு பகுதி இடித்து தள்ளப்பட்டது. அதன் பிறகு தான் விஜயகாந்த் அரசியலில் இறங்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது எல்லோருக்கும் நினைவிருக்கும்.
அதே மாதிரி தான் நடிகர் விஜக்கும் தற்போது நடந்திருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் இளைஞர் அணி அலுவலகம் திருவள்ளூர் மாவட்டம் பத்தியால்பேட்டையில் அமைந்திருக்கிறது.
இந்த கட்டிடம் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டு இருப்பதாக சொல்லி நேற்று போலீசார் உதவியுடன் அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறார்கள்.
ஏற்கனவே விஜய் மும்மொழி கொள்கையை எதிர்த்து கருத்து தெரிவித்திருக்கும் சமயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விஜய் சொந்தமாக சிபிஎஸ்சி பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறார் என பிரச்சனையை கிளப்பி விட்டிருந்தார். அதேநாளில் தான் இந்த சம்பவமும் நடைபெற்று இருக்கிறது.