எனக்கு தேசிய விருது கிடைத்தால்….. நடிகை சாய் பல்லவி ஒபன் டாக்

மலையத்தில் தனது திரை பயணத்தை துவங்கி, இன்று இந்திய சினிமாவில் முக்கிய நாயகியாக மாறியுள்ளார் சாய் பல்லவி. இவர் நடிப்பில் தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த அமரன் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் தண்டேல் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் கலக்கி கொண்டிருந்த சாய் பல்லவி, தற்போது பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். ராமாயணம் கதையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சாய் பல்லவி பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில்,” என் பாட்டி எனக்கு 21 வயதாக இருந்தபோது என் திருமணத்தில் நான் அணிந்து கொள்ள எனக்கு ஸ்பெஷலாக ஒரு புடவையை பரிசாக கொடுத்தார்.
எனக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று தெரியாது. ஆனால் தேசிய விருது போன்று நான் விரும்பும் உயரிய விருதை பெறும் போது அந்த புடவையை அணிந்து கொள்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் எனக்கு தேசிய விருது கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.