பாலிவுட்டில் அறிமுகமாகும் தென்னிந்திய சினிமாவில் கலக்கி வரும் இளம் நடிகை ஸ்ரீலீலா…

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ‘பராசக்தி’ படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் ஸ்ரீலீலா.
தமிழில் இவர் நடிக்கும் முதல் படம். தமிழ், தெலுங்கு மொழிகளை தாண்டி தற்போது இந்தியிலும் ஸ்ரீலீலாவுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் கலக்கி வரும் இளம் நடிகை ஸ்ரீலீலா பாலிவுட்டிலும் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
தொடர்ந்து அனுராக் பாசு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் மூலம் அவர் இந்தியில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
கார்த்திக் ஆர்யன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்திற்கு பிரீதம் இசையமைக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)