அட கார்த்தியின் மகனா இது? வைரலாகும் புகைப்படம்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-12-184840.jpg)
பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, கைதி என அடுத்தடுத்த ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் கார்த்தி.
அடுத்து கார்த்தி நடிப்பில் வா வாத்தியார், சர்தார் 2 படங்கள் வெளியாக இருக்கிறது.
இதற்கு நடுவில் சமீபத்தில் கார்த்தி, நாக சைத்தன்யா-சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள தண்டேல் என சென்னை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.
நடிகர் கார்த்திக்கு கடந்த 2011ம் ஆண்டு ரஞ்சனி என்பவருடன் திருமணம் நடந்தது, இவர்களுக்கு உமையால் என்ற பெண் குழந்தை 2013ம் ஆண்டு பிறந்தது.
பின் சுமார் 7 ஆண்டுகள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது, மகனுக்கு கந்தன் என பெயர் வைத்தனர். இந்த நிலையில் நடிகர் கார்த்தி குடும்பத்துடன் திருப்பதி செல்ல அவரது மகனையும் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட கந்தனின் புகைப்படங்கள் வெளியாக அட கார்த்தியின் மகனா இவர் என ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.