தனுஷூக்கு போட்டியா? பிரதீப் ரங்கநாதன் நச் பதில்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/Pradeep-Ranganathan-1296x700.jpeg)
தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வெளியாகும் அதே நாளில், பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ திரைப்படம் வெளியாக உள்ளது.
இது குறித்து பிரதீப் ரங்கநாதன் பேசியுள்ளார்.
சென்னையில் ‘டிராகன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதனிடம், “தனுஷூடன் போட்டியா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “போட்டி எல்லாம் இல்லை. அந்த மாதிரி தேதிகள் அமைந்து விட்டன.
பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடுவதாக இருந்தோம். ஆனால், விடாமுயற்சி வெளியீட்டால் நல்ல திரையரங்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே 21-ம் தேதி வெளியீட்டுக்கு மாற்றினோம். அதே காரணத்திற்காகவே ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படக்குழுவினரும் மாற்றியிருப்பார்கள் என நினைக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்..
(Visited 1 times, 1 visits today)