மாதம் ஐந்து கோடிக்கு வருமானம் வருகிறதாம்- நடிகை ரம்யா கிருஷ்ணன்
தென்னிந்திய சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் பிசியாக இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அத்தனை மொழிகளிலும் வெயிட்டான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.
நீலாம்பரி, சிவகாமி தேவி போன்ற கேரக்டர்கள் ரம்யா கிருஷ்ணனுக்கு பல வருட காலத்திற்கும் நின்னு பேசும். சினிமா என்று இல்லாமல் ரம்யா கிருஷ்ணன் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
மேலும் தங்கவேட்டை, ஜோடி நம்பர் ஒன் நடுவர் என ரியாலிட்டி ஷோக்களிலும் தன்னுடைய தனித்தன்மையை காட்டி இருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன் முன்பு போல் இல்லாமல் இப்போது எப்போதாவது தான் திரைப்படங்களில் தலையை காட்டுகிறார். இதற்கு காரணம் அவருடைய சொந்த தொழில்தான்.
ரம்யா கிருஷ்ணனுக்கு அவருடைய சொந்த பிசினஸ் மூலமே மாதம் ஐந்து கோடிக்கு வருமானம் வருகிறதாம். முன்னணி ஹீரோக்களின் சம்பளத்தை விட இது அதிகம்.
ரம்யா கிருஷ்ணனுக்கு கேரளாவில் மூன்று பியூட்டி பார்லர்களும், ஹைதராபாத்தில் இரண்டு நகை கடைகளும் இருக்கின்றன. இதன் மூலம் தான் மாதம் ஐந்து கோடிக்கு வருமானம் ஈட்டுகிறாராம்.
ஒரு காலகட்டத்தில் ஓஹோ என்று இருந்த நடிகைகளில் சிலர் இப்போது மருத்துவ செலவுக்கு கூட காசு இல்லாமல் திணறி வருகிறார்கள்.
அப்படி இருக்கும்போது தனக்கு கிடைத்த பெயரையும் புகழையும் வைத்து சரியான விதத்தில் முதலீடு செய்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.