ஜான்வி கபூரை சம்மதிக்க வைத்த தயாரிப்பாளர் இவர்தான்.

தமிழில் கொடிகட்டி பறந்த ஸ்ரீதேவி ஹிந்தி படத்தில் நடிக்க போய் அங்கேயே திருமணம் செய்து செட்டிலானார். அவரின் மறைவை அடுத்து அவருடைய மகள் ஜான்வி கபூர் இப்போது ஹீரோயின் ஆக வலம் வருகிறார்.
ஹிந்தி படங்களில் நடித்து வந்த இவர் தற்போது தெலுங்கு பக்கம் வந்து விட்டார். ஜூனியர் என்டிஆர் உடன் இவர் நடித்த தேவாரா நல்ல அறிமுகமாக இருந்தது.

அதன் பலனாக அவரை தமிழுக்கு இழுத்து வந்துள்ளார் பா. ரஞ்சித்.
இவருடைய நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஒரு வெப் தொடரில் தான் ஜான்வி நடிக்க இருக்கிறார்.
சற்குணம் இயக்கும் இந்த சீரிஸ் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவர இருக்கிறது. இந்த சீரிஸ் அடுத்த வருடத்தில் வெளிவரும் என தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த சீரிஸ் பல மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. தமிழில் ஜான்வி இளம் நடிகர்களுடன் ஜோடி சேர போகிறார் என கூறப்பட்ட நிலையில் வெப் தொடர் மூலம் அவர் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.