தொடர் விடுமுறையை குறி வைக்கும் சூப்பர் ஸ்டாரின் கூலி-விறுவிறுப்புடன் படப்பிடிப்பு
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/l44320241106173200-1296x700.webp)
லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பல மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.
நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பல முன்னணி பிரபலங்கள் இதில் நடித்து வருகின்றனர். அதனாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடுதலாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் எப்போது என்ற தகவல் கசிந்துள்ளது. அதன்படி சன் பிக்சர்ஸ் தொடர் விடுமுறை நாட்களை குறி வைத்துள்ளது.
அப்படி பார்த்தால் அக்டோபர் மாதம் தான் இதற்கு சரியாக இருக்கும். பல டாப் ஹீரோக்களின் படங்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகும்.
தொடர் விடுமுறையை குறி வைக்கும் சூப்பர் ஸ்டாரின் கூலி.ஏனென்றால் அப்போதுதான் அடுத்தடுத்த விடுமுறை நாட்கள் இருக்கும். அந்த செண்டிமெண்ட் படி கூலி படமும் ஆயுத பூஜை அல்லது தீபாவளியை முன்னிட்டு வெளிவர இருக்கிறது.
ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் வருகிறது. புதன், வியாழனை தொடர்ந்து வார இறுதியில் நிச்சயம் தியேட்டர்களில் கூட்டம் கலைக்கட்டும்.
அதனால் இந்த விடுமுறை தினத்தை லாக் செய்வதற்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த தேதியை விட்டால் 20ம் தேதி திங்கட்கிழமை தீபாவளி வருகிறது.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் பெரிய படங்கள் வெளிவருவதற்கு வாய்ப்பு கிடையாது. அதனாலேயே சன் பிக்சர்ஸ் மொத்த வசூலை வாரிசுருட்ட திட்டமிட்டு இருக்கின்றனர்.
இந்த சம்மருக்கு கூலி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் சில மாதங்கள் தள்ளிப் போவது ரசிகர்களுக்கு வருத்தம் தான்.