10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார் நடிகர் அப்பாஸ்
90 காலகட்டத்தில் ஏராளமான பெண் ரசிகைகளுக்கு கனவு நாயகனாக இருந்தவர் தான் அப்பாஸ். சாக்லேட் பாயாக அவர் நடித்த கேரக்டர்களை இப்போதும் மறக்க முடியாது.ஆனால் ஒரு சில வருடங்களுக்குப் பிறகு அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. அதனால் அவர் இரண்டாவது ஹீரோ வில்லன் சதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க தொடங்கினார்.
2015 ஆம் ஆண்டு ஒரு மலையாள படத்தில் நடித்ததோடு சினிமாவுக்கு குட் பாய் சொன்னார்.பின் குடும்பத்தோடு வெளிநாட்டில் செட்டிலான அவர் சமீபத்தில் இந்தியா வந்திருந்தார்.
உடனே சோசியல் மீடியா சேனல்கள் அவரை பேட்டி எடுத்து வைரல் செய்தது.அதை தொடர்ந்து ரசிகர்களும் அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதன்படி தற்போது அவர் 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார். தனக்கேற்ற கேரக்டர்களை தேடி வந்த அவர் இப்போது ஒரு வெப் தொடரில் நடிக்க சம்மதித்துள்ளார்.
விரைவில் திரைப்படங்களில் நடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் அவர் தன்னுடைய ரீ என்ட்ரி சிறப்பாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்.
அரவிந்த் சாமிக்கு தனி ஒருவன் மாதிரி. யார் கண்டா அதன் 2ம் பாகத்தில் இவர் வில்லனாக கூட நடிக்கலாம். எப்படியோ ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் சாக்லேட் பாயின் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கப் போகிறது.