ரவி மோகன் நடிப்பில் வெளிவந்த ‘காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரவிமோகன், நித்யா மேனன் முன்னணி கேரக்டரில் நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ என்ற திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார்.
திரைப்படம் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி வெளியானது. நவீன காதல் கதையை மையப்படுத்தி புதுவிதமாக இந்தப் படத்தை உருவாக்கி இருந்தார்கள்.
இந்தத் திரைப்படம் சுமார் ரூ. 10 கோடி அளவுக்கே வசூல் செய்து வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் முறை, தன்பாலின ஈர்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதைக் களம் அமைந்திருந்தது.
ஆனால்,தமிழ் சினிமாவுக்கு புதுமையான படத்தை கொடுத்தவர் என்ற முறையில் விமர்சகர்கள் பலரும் கிருத்திகா உதயநிதியை பாராட்டியிருந்தனர்.
இந்த திரைப்படம் கடந்த மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், வரும் 11-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.