ரொமான்டிக் ஹீரோவாக வாய்ப்பைப் பெற்றார் பிரபல சீரியல் நடிகர்
ஆரம்பத்தில் சில வீடியோக்களை போட்டு பிரபலமாகி அதன் மூலம் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனில் கண்ணன் என்ற கேரக்டரில் நடித்த சரவணன் விக்ரம் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று புகழை சம்பாதித்து விட்டு தற்போது ஹீரோவாகவும் அடி எடுத்து வைக்கப் போகிறார்.
பிக் பாஸ் 7 சீசனில் கிட்டத்தட்ட 84 நாட்களில் வீட்டுக்குள் இருந்து விளையாடினார். ஆனால் ஒரு சில காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறிய சரவணன் விக்ரமுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார்கள்.
அதன் மூலம் தற்போது ஹீரோவாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் சரவணன் விக்ரம், டியர் ரதி என்ற படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடிப்பதற்கு கம்மிட் ஆயிருக்கிறார்.
இதற்கான போஸ்டர் வெளியான நிலையில் சரவணன் விக்ரம் அதை அவருடைய இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். பிக் பாஸ் பொறுத்த வரை கப்பு யாரு பெறுகிறார்களோ அவர்கள் பெருசாக சாதித்ததாக இல்லை.
பாதியில் திரும்பிப் போனவர்களுக்கு தான் தொடர்ந்து வாய்ப்புகள் பெற்று வெற்றியை தக்கவைத்து வருகிறார்கள்.
இந்த லிஸ்டில் தர்ஷன், கவின், ஹரிஷ் கல்யாண் இருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து சரவணன் விக்ரமுக்கும் தற்போது ஜாக்பாட் அடித்திருக்கிறது. அத்துடன் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலிடம் போகும் பொழுது உங்களுடைய படத்தில் எனக்கு நடிக்கும் ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தாலும் போதும் என அவருடைய ஏக்கத்தை வெளிப்படுத்திட்டு போனார்.
அதனால் தற்போது ஹீரோவாகியிருக்கும் சரவணன் விக்ரம் அடுத்து கமல் படத்திலும் எப்படியாவது நடிக்கும் வாய்ப்பை பெற்றிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருடைய அடுத்த அடுத்த வெற்றிக்கு ரசிகர்கள் அனைவரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.