லீக்கானது விடாமுயற்ச்சி படத்தின் க்ளைமெக்ஸ் – சம்பவம் செய்த த்ரிஷா
நடிகர் அஜித் நடிப்பில் நாளை வெளியாக உள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் குறித்த சில சுவாரசிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
அந்த வகையில் பிரபலம் கூறிய ஒரு தகவலை வைத்து, இப்படத்தின் கிளைமேஸ் இப்படி கூட அமையலாம் என ரசிகர்கள் டீ கோட் செய்துள்ளனர்.
கார் ரேஸை தொடர்ந்து, அஜித்துக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து அஜித் நடிப்பில் சுமார் இரண்டு வருடங்கள் கழித்து வெளியாக போகும், விடாமுயற்சி திரைப்படமும் இவருக்கு வெற்றியாக அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி உள்ளார்.
தற்போது உலகம் முழுவதும் விடாமுயற்சி திரைப்படத்தின் பிரீ புக்கிங் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்திய அளவில் சில மணி நேரங்களில் மட்டும் சுமார் 15 கோடிக்கு மேல் ப்ரீ புக்கிங்கில் விடாமுயற்சி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்து, பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில்… பிக் பாஸ் பிரபலமும் திரைப்பட ஆர்வலருமான அபிஷேக் ராஜா, விடாமுயற்சி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் குறித்து கூறியுள்ள தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அவர் இப்படம் குறித்து கூறும் போது: “விடாமுயற்சி திரைப்படம் ‘பிரேக் டவுன்’ திரைப்படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டாலும், இந்த படத்தை இங்குள்ள ரசிகர்களுக்கு மற்றும் அஜித்துக்கு ஏற்ப கதையில் சில மாற்றங்களை பட குழுவினர் செய்திருக்கலாம்.
குறிப்பாக கிளைமாக்ஸ்-ல் த்ரிஷாவே கூட நெகட்டிவ் ரோலில் நடித்து இருக்க வாய்ப்புள்ளது. தன்னுடைய கணவரை பழி வாங்குவதற்காக இவரே காணாமல் போனது போல் நாடகமாடுவது போல் கதையில் இயக்குனர் மாற்றம் செய்திருக்கலாம் என கூறியுள்ளதால்…
இந்த தகவலை டீ கோட் செய்யது, ஒருவேளை இப்படி தான் கிளைமாக்ஸ் அமையப்போகிறதா? என ரசிகர்களும் இந்த படத்தை பார்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிவித்து வருகிறார்கள்.