மலையாால சினிமாவில் “பணி” மற்றுமொரு மைல் கல்… படம் எப்படி?
மலையாளத்தில் வரவேற்பை பெற்று வரும் படங்களில் பணி என்ற படம் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. பழிவாங்கும் ஒரு கதையை வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் கையாண்டிருக்கிறார் படத்தோட இயக்குநர்.
படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் மலையாளத்தில் சொல்ல வேண்டும் என்றால் அடிபோளி. ரொம்ப அற்புதம். எந்தவித சண்டை காட்சிகள் இல்லை. ஆனால், முக பாவத்தை நடிப்பு ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது இப்படியொரு கிளைமேக்ஸ் காட்சிகளை எந்தப் படத்திலும் பார்த்திருக்க முடியாது.
ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக வெள்ளித்திரையில் வந்து பின்னர் மலையாளத்தில் பிரபலமான நடிகராக வளர்ந்தவர் ஜோஜு ஜார்ஜ். ஒரு நடிகராக எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் அந்தப் படங்களுக்கு இல்லாத வரவேற்பு இவர் இயக்கிய முதல் படத்திற்கு கிடைத்துள்ளது.
ஜோஜூ ஜார்ஜ் இயக்குநராக அவதாரம் எடுத்த முதல் படம் தான் பணி. கடந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி திரைக்கு வந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
இந்தப் படத்தில் அவர் நடிக்கவும் செய்திருக்கிறார். அவருடன் இணைந்து அபிநயா, சாகர் சூர்யா, சாந்தினி ஸ்ரீதரன், சுஜித் சங்கர், சீமா, அனூப் கிருஷ்ணன், அபாயா ஹிரன்மாயி என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
படத்தின் ஆரம்பத்தில் மெக்கானிக் கடையில் வேலை பார்க்கும் 2 இளைஞர்களை காண்பிக்கிறார்கள். அவர்கள் தான் படத்தின் வில்லன்கள் என்று அப்போது தெரியாது.
அதன் பிறகு ஏடிஎம்மில் வைத்து கொலை செய்கிறார்கள். எந்தவிட படபடப்பு இல்லை, குற்ற உணர்ச்சி இல்லை. முதல் கொலைக்கு பிறகு அவர்களது பேச்சும், ஸ்டைலும் எதோ பல கொலைகளை செய்த டான் மாதிரி நடந்து கொள்கிறார்கள்.
கொலை செய்த பிறகு போலீசிடமிருந்து தப்பிக்க அவர்கள் கையாண்ட விதம் தான் பிளஸ் பாய்ண்ட். போலீஸ் ஸ்டேஷனுக்கே சென்று கொலை பற்றி சாட்சியும் சொல்லியிருக்கிறார்கள்.
அந்த 2 இளைஞர்களால் நிம்மதியாக, ஜாலியாக சென்று கொண்டிருந்த தொழிலதிபரும் பார்ட் டைம் மாஃபியா லீடருமான ஜோஜூ ஜார்ஜின் மனைவி அபிநயாவிற்கு எதிராக சம்பவங்களுக்கு பின் நடக்கும் கதைகள் தான் படத்தின் சுவாரஸ்யம்.
மாஃபியா டானான ஜோஜூ ஜார்ஜூக்கு பக்க பலமாக இருப்பது, பிரசாந்த அலெக்சாண்டர் (குருவிலா), சுஜித் சங்கர் (சாஜி), பாபி குரியன் (டேவி ஆண்டனி), அபாயா ஹிரண்மயி (ஜெயா டேவியின் மனைவி) ஆகியோர் தான்.
ஒரு முறை பார்த்தால் திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சிகளும், கதாபாத்திரங்களும் தான் படத்தோட பிளஸ் பாய்ண்ட். குழந்தைகள், சிறுவர்கள் கூட படத்தை ரசிகர்கள் என்பதை படத்தோட சக்ஸஸ் மீட்டில் தெரிகிறது.
எளிமையான நடிகர்கள், யதார்த்தமான நடிப்பு, ஊரைச் சுற்றிலும் நடக்கும் கார் பைக் ரேஸ் காட்சிகள் என்று படத்தை பார்க்கும் போது பிரமிக்க வைக்கிறது. குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.38 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. இந்த நிலையில் தான் இந்தப் படம் சோனி லிவ் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகி அமோக வரவேற்பு பெற்று வருகிறது. சோஷியல் மீடியாவில் படத்தைப் பற்றி பேச்சு தான் இன்னும் வைரலாகிக் கொண்டிக்கிறது.
ஆனால், படத்தில் ஒரு சில காட்சிகள் வைக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்லும் அளவிற்கு ஒரு சில காட்சிகள் இருந்தது. மற்றபடி படத்தை கொண்டாட வேண்டும். மலையாளத்தில் இப்படியொரு படத்தை கொடுத்த இயக்குநர் ஜோஜூ ஜார்ஜூக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம்.