2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கிற்கு நிதி பற்றாக்குறையால் நெருக்கடி

2032 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான நிதி தொடர்பாக ஒரு சிக்கலான சூழ்நிலை எழுந்துள்ளது.
இது 3.5 பில்லியன் டொலர் நிதி பற்றாக்குறையைக் கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக நாட்டி்றகு வரும் விளையாட்டு வீரர்களை தங்க வைப்பதற்காக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள தடகள கிராமங்களால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் 16,000க்கும் மேற்பட்ட பெண் விளையாட்டு வீரர்களுக்கு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் கீழ், பிரிஸ்பேன், கோல்ட் கோஸ்ட் மற்றும் சன்ஷைன் கோஸ்ட் பிராந்தியங்களில் 04 தடகள கிராமங்களை கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 8 times, 1 visits today)