X சமூகவலைத்தளத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள Le Monde
பிரெஞ்சு தினசரி பத்திரிகையான Le Monde, எலான் மஸ்கின் X சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் நெருங்கிய நண்பராக இருக்கும் எலான் மஸ்க், டுவிட்டர் என அறியப்பட்ட X எனும் சமூகவலைத்தளத்தை சில வருடங்களுக்கு முன்னர் வாங்கியிருந்தார்.
அதன் பின்னர், குறித்த சமூகவலைத்தளம் மிக தீவிர செயற்பாடுகளுக்கு துணை போவதாக குற்றம் சாட்டப்பட்டது. பல பிரபலங்கள் அதில் இருந்து வெளியேறியும் இருந்ததனர்.
இந்நிலையில், பிரெஞ்சு பத்திரிகையான Le Monde, தங்களது செய்திகளையோ, வேறு எந்த பதிவுகளையோ X தளத்தில் பகிரமாட்டோம் என அறிவித்துள்ளனர்.
ஒரு தலையங்க அறிக்கையில், Le Monde இன் தலையங்க இயக்குனர் Jérôme Fenoglio, இந்த நடவடிக்கைக்கான காரணங்களை கோடிட்டுக் காட்டினார், X ஆனது செய்திகளை மையமாகக் கொண்ட நடுநிலை சமூக வலைப்பின்னலில் இருந்து மஸ்கின் அரசியல் செயல்பாட்டின் விரிவாக்கத்திற்கு மாறிவிட்டது என்று கூறினார்.