“வீடியோ டெலிட் பண்ணு காசு தரேன்..” யூடியூபரிடம் டீல் பேசிய நயன்
சமீப காலமாகவே நயன்தாராவை கெட்ட நேரம் சுற்றி சுழற்றி அடிக்கிறது.
இந்த நிலையில் தான் யூடியூபர்கள் மற்றும் இன்ஃபுளூயன்ஸர்களை நேரில் அழைத்து தன்னுடைய Femi9 ப்ராடக்டுக்கான விளம்பரத்திற்காக ஒரு ஈவென்ட் வைத்திருந்தார்.
இதில் நயன்தாரா சரியான நேரத்திற்கு வரவில்லை, சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என ஏகப்பட்ட குற்றச்சாட்டு.
நயன்தாரா லேட்டாக வந்ததால் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நிறைய பேர் கோபப்பட்டு பேச ஆரம்பித்து அங்கே சலசலப்பு ஏற்பட்டது.
அப்போதுதான் யூடியூபர் ஒருவர் முன் வந்து மேடை ஏறி எல்லோரும் அமைதியாக இருங்க, அவங்க ஒன்னும் சாதாரண பீப்புள் கிடையாது என பேசி இருந்தார்.
இந்த வீடியோவை பயங்கரமாக எல்லோரும் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். நெனச்சது ஒன்னு நடந்தது ஒன்னு என்ற கதையாக நயன்தாராவுக்கு மாறிவிட்டது.
இந்த நிலையில் அடிபொலி ஃபுட்டி என்ற யூட்யூப் சேனல் வைத்திருப்பவர் இது குறித்து வீடியோ போட்டு இருந்தார்.
இந்த வீடியோ பெரிய அளவில் வைரல் ஆனதோடு நயன்தாராவுக்கு நெகட்டிவ் ஆகவும் மாறியது.
இந்த நிலையில் நயன்தாரா தரப்பு இவரை அழைத்து வீடியோவை டெலிட் செய்யும் படியும் அதற்காக காசு கொடுப்பதாகவும் பேசி இருக்கிறார்கள்.
ஆனால் இவர் அதற்கு மறுத்து இருக்கிறார். பின்னர் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடம் பேசி இந்த வீடியோவுக்கு ஸ்ட்ரைக் கொடுத்திருக்கிறார்கள்.
தற்போது இவர் அந்த விஷயத்தை வெட்ட வெளிச்சம் ஆக்கிவிட்டார். பணத்தால் எல்லாம் செய்ய முடியும் என்று நினைத்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இது ஒரு பெரிய பாடமாக அமைந்து விட்டது.