5 நாள் முடிவில் மதகஜராஜா எவ்வளவு கலெக்ஷன் அள்ளியது தெரியுமா?
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் மதகஜராஜா.
2012ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2013ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என விளம்பரம் செய்யப்பட்டது.
பின் பல பிரச்சனைகளுக்கு பிறகு அதாவது கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இப்படம் 2025, ஜனவரி பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது.
பல வருடங்கள் கழித்து வெளியான இப்படத்திற்கு யாருமே எதிர்ப்பாராத விதமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ரூ.15 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
தற்போது மதகஜராஜா 5 நாள் முடிவில் இப்படம் மொத்தமாக ரூ. 28 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

(Visited 31 times, 1 visits today)





