இலங்கையில் குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வரும் தொற்றா நோய்கள் : மக்களின் கவனத்திற்கு!
இலங்கையில் குழந்தைகளிடையே நீரிழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் என்பன தற்போது அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவ பீடத்தின் குழந்தை மருத்துவத் துறையின் பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவிக்கையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தைகள் ஆரோக்கியமான உணவைப் பின்பற்ற ஊக்குவிப்பது அவசியம். கூடுதலாக, குழந்தைகளிடையே மனநிலை தொடர்பான நோய்களும் தொடர்ந்து பதிவாகி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 2 visits today)