விபத்தில் சிக்கிய அஜித்.. பதறிப்போன விஜய்! தொலைபேசியில் நலம் விசாரித்தார்
நடிகர் அஜித் மற்றும் விஜய் மிகவும் கடின உழைப்பைச் செலுத்தியே தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர். இருவருக்கும் இடையில் ஒரு கட்டம் வரை மிகப்பெரிய போட்டியும் இடைவெளியும் இருந்தாலும், ஒரு கட்டத்திற்குப் பின்னர் இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டார்கள்.
இருவரும் ஒருவர் குறித்து ஒருவர் மற்ற திரைப்பிரபலங்களிடம் மிகவும் கண்ணியமாக பேசுவது தொடங்கி, தங்களுக்கு இடையே நல்ல நட்பையும் வளர்த்துக் கொண்டார்கள்.
இப்படியான நிலையில் அஜித், தனது கார் ரேஸ் பந்தயத்திற்காக பயிற்சியில் ஈடுபட்டபோது நேற்று அதாவது, ஜனவரி 7ஆம் தேதி பெரிய விபத்தினைச் சந்தித்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் விஜய், அஜித்தின் உடல் நலம் குறித்து விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவில் நடைபெறவுள்ள ஃபார்முலா 3 கார் ரேஸில் நடிகர் அஜித் தான் தொடங்கியுள்ள கார் ரேஸ் அணியுடன் கலந்துகொள்ளவுள்ளார்.
வரும் 11ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள இந்த கார் ரேஸ் பந்தயமானது, வரும் அக்டோபர் மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கார் ரேஸில் கலந்து கொண்டு கோப்பையை வெல்லவேண்டும் என்பது அஜித்தின் பலநாள் கனவு.
எனவே இதற்காக தனது உடல் எடையை அஜித்குமார் பெருமளவு குறைத்துக்கொண்டுள்ளார். போட்டி தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அஜித்குமார் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். அவருடன் அவரது அணியைச் சேர்ந்தவர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, அதாவது ஜனவரி 7ஆம் தேதி பயிற்சியில் ஈடுபட்ட போது அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பதறவைத்தது. இந்த விபத்தில் அஜித்துக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும். அவர் ரேஸில் கட்டாயம் கலந்துகொள்வார் எனவும் கூறியுள்ளனர்.
இப்படியான நிலையில், நடிகர் விஜய் விபத்து தொடர்பான வீடியோவைப் பார்த்து உடனே பதறிப்போய் அஜித் குடும்பத்தாருக்கும், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவுக்கும் போன் செய்து அஜித்தின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாகவும், மேலும் அஜித்திடம் பேசிய விஜய், கூடுதல் கவனமாக இருக்கும்படியும், ரேஸில் வெல்ல வாழ்த்துகளும் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தகவல் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.