வேறு நபரை திருமணம் செய்த ஷீத்தல் – பப்லுவுக்கு கிடைத்த அல்வா
தமிழில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நடிகர் பிரித்திவிராஜ்.
1975 ஆம் ஆண்டு வெளியான, எம்ஜிஆரின் ‘நாளை நமதே’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது .
குறிப்பாக பப்லு எம்ஜிஆரின் இளம் வயது தோற்றத்தை இவர் ஏற்று நடித்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க காரணமாக அமைந்தது.
ஹீரோ வாய்ப்பு தேடியவருக்கு ஏனோ ஹீரோவாக ஜெயிக்க முடியாமல் போனது.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பிரபலமான பப்லு, ஏராளமான சீரியல்களிலும் – ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
பப்லு பிரித்திவிராஜ் கடந்த 1994-ஆம் ஆண்டு பீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு Ahed என்கிற மகன் ஒருவர் உள்ளார். 25 வயதுக்கு மேல் ஆகும் இவருர் ஆட்டிசம் குறைபாடு கொண்டவர். தன்னுடைய மகனை பார்த்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே பப்லு பிரித்திவிராஜ் மற்றும் பீனா இருவரும் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.
தன்னுடைய மகன் மீது பப்லு பிரித்திவிராஜ் உயிரையே வைத்திருந்தாலும், சில கருத்து முரண்பாடு காரணமாக மனைவியை கடந்த 2022-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
இதன் பின்னர் மலேசியாவைச் சேர்ந்த ஷீத்தல் என்பவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அதை மறுத்த பிரித்திவிராஜ் கூடிய விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை எங்களின் திருமணம் நடக்கவில்லை என்பதையும் கூறி இருந்தார்.
58 வயதில் 25 வயது பெண்ணை பிரித்திவிராஜ் காதலித்தது, கடந்த ஆண்டு சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்ட விஷயமாக மாறியது. ஒரு சிலர் இதனை விமர்சித்தாலும் இன்னும் சிலர், “பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான் உனக்கு என்ன? என்று ” மீம்ஸ் போட்டு கலாய்த்து வந்தனர்.
தன்னுடைய காதலியின் பிறந்த நாளுக்கு பல லட்ச ரூபாய் செலவு செய்து அவருக்கு சூட் ரூம் புக் செய்து, இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரித்திவிராஜ் ஏகப்பட்ட பரிசு பொருட்களையும் வாங்கிக் கொடுத்து கோடிக்கணக்கில் செலவு செய்தார் என கூறப்பட்டது.
ஷீத்தலும் – பப்லு பிரித்திவிராஜூம் உருகி உருகி ரோமியோ ஜூலியட் ரேஞ்சுக்கு காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது. இதனை பப்லு உறுதி செய்யவில்லை என்றாலும் ஷீத்தல், பப்லு உடனான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் நீக்கி உறுதி செய்தார்.
பிரித்திவிராஜிடம் இருந்து பிரிந்த கையேடு, ஷீத்தல் தன்னுடைய நண்பரையே திருமணம் செய்து கொண்டுள்ளதாக புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். கணவரின் முகத்தை காட்டவில்லை என்றாலும் மணமகள் கெட்டப்பில், தற்போது புகைப்படம் வெளியிட்டுள்ளார். ஷீத்தல் திருமணம் செய்து கொண்டுள்ள நண்பர் ஒரு தடகல விளையாட்டு வீரர் என கூறப்படுகிறது. மேலும் ஜிம்மில் பயிற்சியாளராக உள்ளாராம். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்களின் உடல் அமைப்பு ரவிவாஸ் கிளாசிக்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.