இந்தியன் 3 – தியேட்டரில் மட்டும்தான் ரிலீஸ்.. பட்டும் திருந்தாத சங்கர்… அதிரடி அறிவிப்பு
பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்து தோல்வியை காணாத இயக்குனர்களில் சங்கரும் ஒருவர்.
கொண்டாடப்படும் இயக்குனர்கள் பட்டியலில் இருந்த இவர், இந்த வருடம் மீம் பட்டியலில் இருந்தார். இந்த வருடம் வெளியான படங்களில் அதிக ட்ரோல் சந்தித்த ஒரு படம் என்றால் அது இந்தியன் 2 படம் என்றே சொல்லலாம். வெளியான முதல் நாளிலிருந்தே, படத்தை ரசிகர்கள் வச்சு செய்துவிட்டார்கள்.
இந்தியன் 2படத்தை பொறுத்த வரையில், கடைசியாக வரும் ட்ரைலர் மட்டும் தான் நன்றாக இருக்கும். மற்ற காட்சிகளை எல்லாம் பார்த்து, ஆடியன்ஸ் கதற ஆரம்பித்துவிட்டார்கள்.
இதற்கு வலு சேர்ப்பது போல அனிருத்தின் ‘தாத்தா வராரு கதற விட போறாரு’ பாட்டு வேறு.. உண்மையிலேயே கதற விட்டுட்டாரு, அனிருத் முன்பே எச்சரித்து இருக்கிறார் என்று நெட்டிசன்கள் விமரித்தார்கள்.
இதை தொடர்ந்து படம் சரியாக ஓடாததனால் லைக்கா பெருமளவில் நஷ்டத்தை சந்தித்தது. இதனால், இந்தியன் 3 படம் நிச்சயமாக OTT-யில் தான் வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால் சமீபத்தில் இயக்குனர் ஷங்கர், இதற்க்கு பதில் கொடுத்துள்ளார். இந்தியன் 3படம் தியேட்டரில் வெளியாகுமா அல்லது OTT-யில் வெளியாகுமா என்று பத்திரிக்கையாளர் கேட்டபோது, “நிச்சயமாக தியேட்டரில் தான் வெளியாகும்.”
“இந்தியன் 2 படத்துக்கு இவ்வளவு மோசமான விமர்சனம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த விமர்சனத்தை ஏற்று கொள்கிறேன். இந்தியன் 3 படத்தை சிறப்பாக எடுத்துள்ளேன்.
நிச்சயம் இது கமல்ஹாசன்க்கு ஒரு கம் பேக் ஆக இருக்கும். தியேட்டரில் தான் படம் ரிலீஸ் ஆகும். நேரடி OTT ரிலீசுக்கு வாய்ப்பு இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.