பிரித்தானியாவில் மருத்துவராக பணிப்புரிய பள்ளிப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு வாய்ப்பு!
பிரித்தானியாவில் வளர்ந்து வரும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், புதிய NHS திட்டங்களின் கீழ், பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் மருத்துவர்களாக பணிப்புரியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பள்ளிப்படிப்பை நிறைவு செய்தவர்கள் பல்கலைக்கழகம் செல்லாமலேயே மருத்துவர்களாக பணிப்புரிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி திட்டமானது, 10 மருத்துவர்களில் ஒருவர் பாரம்பரிய மருத்துவப் பட்டம் இல்லாமல், ஏ-நிலைகளுக்குப் பிறகு நேரடியாகப் பணியைத் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் செவிலியர்களில் மூன்றில் ஒரு பங்கினர், “தீவிரமான புதிய அணுகுமுறையின்” பயிற்சி பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பணியாளர்கள் பற்றாக்குறை அரை மில்லியனை எட்டக்கூடும் என்ற எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கும் ஆட்சேர்ப்பு செய்வதற்கும் புதிய வழிகளைக் கண்டறியும் வகையில் மேற்படி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள NHS இங்கிலாந்தின் தலைவரான அமண்டா பிரிட்சார்ட், தற்போது இங்கிலாந்தில் 1 இலட்சத்து 24 ஆயிரம் சுகாதார சேவை காலியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பொதுவாக, மருத்துவர்களின் பயிற்சியானது மருத்துவப் பள்ளியில் ஐந்தாண்டுகளை உள்ளடக்கியது, என்றும், அவர் எடுத்துரைத்தார்.