அல்லு அர்ஜூனுக்கு வந்த பேராபத்து… படுகாயமடைந்த சிறுவனுக்கு மூளைச்சாவு?
புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆனதில் இருந்து அல்லு அர்ஜுன் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றார்.
கடந்த 5ஆம் தேதி அல்லு அர்ஜுன் படம் பார்க்க, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு வந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.
மேலும் அவரது மகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அந்த சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த பெண்உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறை அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்தது. இதனால், கடந்த 13ஆம் தேதி அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பின்னர், தெலங்கானா உயர் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதால் அவர் விடுதலை செய்யப்பட்டார். அதாவது 13ஆம் தேதி மதியம் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன், 14ஆம் தேதி காலை, விடுவிக்கப்பட்டார்.
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு திரைத்துறையினர் கண்டனம் தெரிவித்தாலும், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, மரணம் அடைந்த ரேவதி என்ற பெண்ணின் பக்கம் நின்று பேசினார்.
மேலும், சிகிச்சையில் உள்ள சிறுவனுக்கு ஆதரவாகவும் பேசினார். இப்படியான நிலையில், சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டாலே, கிட்டத்தட்ட மரணம் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றே எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக மூளைச்சாவு அடைந்த ஒரு மனித உடலில் அடுத்தடுத்து உடல் பாகங்கள் செயலிழக்கச் செய்யும். ஆனால், அதற்குள் அந்த உடலில் இருந்து நல்ல நிலையில் உள்ள பாகங்களை மற்றவர்களுக்கு பொருத்தும் நோக்கில், எடுப்பார்கள்.
குறிப்பாக கண், கிட்னி போன்றவற்றைக் கூறலாம். ஆனால் தற்போது மூளைச்சாவு அடைந்திருப்பது சிறுவன் என்பதால், மருத்துவக்குழு என்னமாதிரியான அறிவுரைகளை வழங்கப்போகின்றார்கள் என்பது குறித்து பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும். ‘
அம்மாவைத் தொடர்ந்து மகனும் மரணத்தை தழுவவுள்ளதால் நெட்டிசன்கள் அல்லு அர்ஜுனை மிகவும் காட்டமாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அல்லு அர்ஜுன் விளம்பரத்தை விரும்பக்கூடியவர். அவரது விளம்பர மோகத்தால் தற்போது இரண்டு உயிர்கள் பறிபோயுள்ளது என மிகவும் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
சிறுவனும் மரணத்தை தழுவவுள்ளதால், அல்லு அர்ஜுனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தெலங்கானா போலீஸ் தரப்பில், அல்லு அர்ஜுன் ஜாமீன்க்கு எதிராக மேல்முறையீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக பேச்சுகள் எழுந்து வருகின்றது.
(Visited 1 times, 1 visits today)