குழந்தைகளை வளர்க்க சிறந்த நாடுகள் – முதல் இடங்களை பிடித்த ஐரோப்பிய நாடுகள்
சிறு வயதிலிருந்தே குழந்தைகளை வளர்க்க சிறந்த 10 நாடுகளில் ஐரோப்பிய நாடுகள் முதல் இடங்களை பிடித்துள்ளது.
World of Statistics இந்த தரவரிசையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிறுவயதிலிருந்தே குழந்தையை வளர்க்க சிறந்த நாடாக டென்மார்க் முதலிடத்தில் பெயரிடப்பட்டுள்ளது.
அந்த நாடுகளில் ஸ்வீடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள பின்னணியில் நோர்வே இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தரவரிசையில் பின்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களிலும், கனடா மற்றும் நெதர்லாந்து ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களிலும் உள்ளன.
இந்தப் பட்டியலில் நியூசிலாந்து ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ள பின்னணியில் சிறுவயதிலிருந்தே குழந்தையை வளர்க்க மிகவும் பொருத்தமான நாடுகளில் பத்தாவது இடத்திற்கு ஒஸ்ரியா பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.