முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆபத்தா? பொலிஸார் விளக்கம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பில் எந்த விதத்திலும் சமரசம் செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இல்லாதொழிக்கும் கொள்கை முடிவிற்கு அமையும்.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பின்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு விவகாரங்களை ஈடுபடுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் வருடாந்த செலவு 1,100 மில்லியன் ரூபாவாகும்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வருடாந்தம் 326 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலவிடப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஆஜரான சட்டத்தரணி மனோஜ் கமகே இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.