கீர்த்தியின் கணவர் யார் தெரியுமா? மொத்தம் எத்தனை கோடினு தெரியுமா?
நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது நீண்ட கால காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை இன்று கோவாவில் திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணத்தில் விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.
இவரது திருமணம் பற்றிய வதந்திகள் கடந்த சில காலமாகவே பரவிவந்தது. சூழல் இப்படி இருக்க அவர் சில வாரங்களுக்கு முன்பு தனது காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை அறிமுகம் செய்துவைத்தார்.
இரண்டு பேருமே கடந்த பதினைந்து வருடங்களாக காதலித்துவருகிறார்கள். ஆண்டனிக்கு கொச்சி, சென்னை, துபாய் என்று பல இடங்களில் தொழில் இருப்பதாகவும்; அவர் வெளியில் தெரியாத மிகப்பெரிய தொழிலதிபர் என்றும் கூறப்படுகிறது.
இரண்டு பேருக்கும் டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் திருமணம் நடக்கும் என்று குடும்பத்தினர் அறிவித்தார்கள். அதன்படி இன்று கோவாவில் இரண்டு பேருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இதில் விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
ஆண்டனி கிறிஸ்தவராக இருந்தாலும் ஹிந்து முறைப்படி தாலி கட்டினார். அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். இந்தச் சூழலில் அவர்களது திருமணம் பற்றி பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
“கீர்த்தி சுரேஷும் ஆண்டனியும் 15 வருடங்களாக காதலித்து வருகிறார்களாம். தான் இன்னாரைத்தான் காதலிக்கிறேன் என்று சில மாதங்களுக்கு முன்பு கீர்த்தி சொல்லியிருந்தால் நிறைய கிசுகிசுக்கள் வந்திருக்காது. இந்தத் திருமணத்தை அவர்கள் விற்காமல் இருந்தால் நல்லதுதான்.
கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டிலின் திருமணம் கோவாவில் பிரமாண்டம்தான். சினிமாவில் ஃபேமஸான ஒருவரிடம் கீர்த்தி சுரேஷுக்கு எவ்வளவு சொத்து இருக்கும் என்று கேட்டேன். அதற்கு அவரோ 500 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய்வரை இருக்கும் என்று சொன்னார். அது எனக்கு ஷாக்கை கொடுத்தது.
ஆனால் அதுதான் உண்மை என்று சொன்னார். குறைந்தபட்சம் சில நூறு கோடி ரூபாய் செலவில்தான் அவர்களது திருமணம் நடக்கும்” என்றார்.