சிரியாவில் ஆட்சி கவிழ்ப்பு – அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு
சிரியாவில் கிளர்ச்சிக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முற்படுகிறது.
சிரியாவில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் அங்குள்ள கிளர்ச்சிக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் சிரியாவுடன் அதிகாரபூர்வமற்ற அரசதந்திர உறவுகளை அமைத்துகொள்வதற்கு, துருக்கியே போன்ற வட்டாரப் பங்காளிகளுடன் கைகோக்க எண்ணுகிறது.
சிரியாவில் உள்ள கிளர்ச்சிக் குழுக்களோடு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா பல வழிகளை ஆராய்ந்திருப்பதாக அதன் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சிரியாவைக் கைப்பற்றியுள்ள ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவுடன் புதிய இணைப்புகளை அமைத்துக்கொள்ள வட்டார, மேற்கத்திய அரசாங்கங்கள் முன்வந்திருக்கின்றன.
அந்தக் குழு இதற்கு முன்னர் அல்-கயீடா அமைப்புடன் சம்பந்தப்பட்டிருந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், துருக்கியே, ஐக்கிய நாட்டு நிறுவனம் ஆகியவை அல்-கயீடா அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தியுள்ளன.