திருமணத்தின் போது சோபிதா அணிந்த நகைகள் பற்றி ரகசிய தகவல் வெளியானது…
நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணம் நேற்று பிரமாண்டமாக ஹைதராபாத்தில் நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமே பங்கேற்று மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இடையே திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சோபிதா உடைய திருமண புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சோபிதா தனது திருமணத்தில் தங்க கலர் புடவையும் அதற்கு மேட்சிங் ஆக சில நகைகளை அணிந்திருந்தார்.
இதில் சோபிதா அணிந்திருந்த நகைகள் பற்றி சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா அணிந்திருந்த நெற்றிச்சுட்டி உற்பட கழுத்து அட்டியல் போன்ற நகைகளையே சோபிதாவும் அணிந்திருந்தார்.
மேலும் ஐஷ்வர்யாராய் அணிந்திருந்த ஆரம் மாலையையும் சோபிதா அணிந்திருந்தார்
இதை கீழே கொடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து நீங்கள் விளங்கிக்கொள்ளலாம்…