செங்கடலில் விபத்துக்குள்ளான பாய்மரப் படகு : மூவரின் உடல்கள் மீட்பு!

செங்கடலில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் காணாமல்போயிருந்த நிலையில் 3 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
44 பேருடன் பயணித்த சீ ஸ்டோரி என்று பெயரிடப்பட்ட அந்த படகு செங்கடல் பகுதியில் விபத்தில் சிக்கியது. இருபத்தெட்டு பேர் மீட்புப் படையினரால் காப்பாற்றப்பட்ட நிலையில் பலர் மாயமானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரித்தானியா, அமெரிக்கா, ஜெர்மனி, போலந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், சீனா, பின்லாந்து, ஸ்லோவாக்கியா, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் படகில் இருந்தனர். தகவல்களின்படி, காணாமல் போனவர்களில் இரண்டு பிரித்தானியர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்தக் கப்பல் மார்சா ஆலமிலிருந்து ஐந்து நாள் பாய்மரப் பயணத்திற்காக புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)