முக்கிய செய்திகள்

காசா போர் பகுதியில் இஸ்ரேலிய பெண் பிணைக் கைதி கொல்லப்பட்டதாக ஹமாஸ் தகவல்

இஸ்‌ரேலியப் பெண் பிணைக்கைதி ஒருவர் காஸாவின் வடக்குப் பகுதியில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு நவம்பர் 23ஆம் திகதியன்று தெரிவித்தது.இத்தகவல் உறுதி செய்யவோ மறுக்கவோ முடியவில்லை என்று இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது.

ஹமாஸ் போராளிகள் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்‌ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.இதில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.251 பேரை ஹமாஸ் போராளிகள் பிடித்துச் சென்றனர்.அந்தப் பிணைக்கைதிகளில் 34 பேர் உயிரிழந்து விட்டதாக இஸ்‌ரேலிய ராணுவம் தெரிவித்தது.

97 பிணைக்கைதிகள் காஸாவில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்‌ரேல் நம்புகிறது.

2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு வார போர் நிறுத்தத்தின்போது 105 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.அவர்களில் 80 இஸ்‌ரேலியர்களும் அடங்குவர்.அவர்களது விடுதலையை உறுதி செய்ய 240 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.

இந்நிலையில், அடைத்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளில் ஒருவரான அப்பெண் உயிரிழந்து விட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.ஆனால் அப்பெண்ணின் அடையாளத்தை அது வெளியிடவில்லை.அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்தும் ஹமாஸ் தெரிவிக்கவில்லை.

பிணைக்கைதி கொல்லப்பட்டதைக் காட்டும் காணொளியை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.அதை இஸ்‌ரேலிய ராணுவம் ஆராய்ந்து வருகிறது.

இதற்கிடையே, அப்பெண்ணை அடைத்து வைத்திருந்தோருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் பல வாரங்கள் கழித்து அவர்களுடன் தொடர்புகொள்ள முடிந்ததாகவும் ஹமாஸ் அமைப்பின் எஸ்ஸித்தீன் அல் கஸாம் படைப் பிரிவின் செய்தித்தொடர்பாளர் அபு உபைதா தெரிவித்தார்.

அப்பெண் இன்னொரு பெண்ணுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.அந்த இன்னொரு பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்ததாக அபு உபைதா தெரிவித்தார்.அபு உபைதா இந்த அறிக்கையை வெளியிட்டதற்கு முன்பு ஐந்து ராணுவ வீரர்கள் உட்பட பத்து பெண் பிணைக்கைதிகள் இன்னும் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியது.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • April 20, 2023
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சத வீதம் அதிகரித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்