செய்தி

பும்ராவின் பந்துவீச்சில் சந்தேகம் – கதறும் ஆஸ்திரேலிய ரசிகர்கள்!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களில் சுருண்டது.

தொடர்ந்து, 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கே.எல் ராகுல் – ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கினர். முதல் இன்னிங்ஸ் போல் அல்லாமல் இந்த முறை ஆஸ்திரேலிய பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்ட இருவரும், அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

மேலும், சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் ஜோடியில் இருவருமே அரை சதமடித்தனர் . இந்திய அணி விக்கெட் இழப்பின்றி ரன்கள் எடுத்திருந்த போது 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜெய்ஸ்வால் 90 ரன்களும் , கே.எல் ராகுல் 62 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர் . இந்திய அணி 218 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தி வரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பவுலிங் ஆக்சன் மோசமாக இருப்பதாக கூறி ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

கேப்டன் ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக விடுப்பில் இருக்கும் நிலையில், தற்காலிக கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா பொறுப்பேற்றுள்ளார். இப்போட்டியில் தனது தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் அவர், நேற்று முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது அவர் மேலும் ஒரு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம், அவர் தனது 11-வது 5 விக்கெட் சாதனையை படைத்தார்.

இந்த நிலையில், பும்ரா பந்து வீசுவது சர்வதேச கிரிக்கேட் கவுன்சில் (ஐ.சி.சி) விதிகளுக்கு புறம்பானது என்றும், அவரது முழங்கை மடிந்து இருப்பதாகவும், அவர் பந்தை எறிவதாகவும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவர் எக்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், பும்ராவின் பவுலிங்கை உன்னிப்பாக பார்க்கும் போது, அவர் பந்தை எறிவது போல் தோன்றுவதாக குற்றம் சாட்டியுள்ளார். ‘ஜஸ்பிரித் பும்ரா எப்படி அந்த ஆக்சனுடன் பந்து வீச அனுமதிக்கப்படுகிறார். அவர் தெளிவாக எறிகிறார்’ என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

‘பும்ரா எறிவது குறித்து ஏன் கேள்வி எழுப்படவில்லை. அல்லது இந்தியருக்கு எதிராக அழைப்பு விடுக்க நடுவர்கள் மிகவும் பயப்படுகிறார்களா?’ என்று ஒருவர் கூறியிருக்கிறார்.

இதனிடையே, பும்ராவின் பவுலிங் ஆக்சன் குறித்து விளக்கமளித்துள்ள இங்கிலாந்து வீரரும், பவுலிங் பயிற்சியாளருமான இயான் பான்ட், ‘சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளில் இருக்கும் ஹைப்பர் மொபைலிட்டி (Hypermobility) என்ற விதிமுறையின்படி பும்ராவின் பந்துவீச்சு விதிகளுக்கு உட்பட்டது தான்’ என்று தெரிவித்துள்ளார்.

“அவரது கை மணிக்கட்டில் இருந்து முழங்கை வரை நேராக இருப்பதை நீங்கள் பார்க்கலாம். செங்குத்தாக மேலே இருக்கும் போது முழங்கை 15 டிகிரிக்கு மேல் வளைக்கக் கூடாது என்பது விதி. அவரது கையில் முன்னோக்கி வளைந்திருப்பதை நீங்கள் தெளிவாகக் காணலாம், இது மிகை நீட்டிப்பு ஆகும். இது ஹைப்பர்-மொபைல் மூட்டுகள் உள்ளவர்களுக்கு (ஒரு முன்னோக்கி வளைவு) அனுமதிக்கப்படுகிறது.

அதிக நீட்டிப்பு என்பது இயக்கத்தின் திசைக்கு ஒத்த திசையில் உள்ள இயக்கம் – கீழ்நோக்கி அல்லது பக்கமாக அல்ல. அதனால்தான் பும்ராவின் பவுலிங் ஆக்சன் சட்டப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் இது ஹைப்பர்மொபிலிட்டியின் வழிகாட்டுதல்களுக்குள் உள்ளது” என்று இயான் பான்ட் கூறியுள்ளார்.

 

 

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி