தனிமையில் இருக்கும்போது தனக்கு தானே பேசிக் கொள்ளும் டால்பின்கள்!
உலகின் சோகமான பாட்டில்நோஸ் டால்பின் தனக்கு நண்பர்கள் இல்லாததால் தனக்குத்தானே பேச ஆரம்பித்திருக்கலாம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உள்ளூர் மக்களால் டெல்லே என்று அழைக்கப்படும் ஆண் டால்பின், பால்டிக் கடலில் தனியாக சுற்றித் திரிந்த நிலையில் அதனை விஞ்ஞானிகள் மீட்டு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லே டென்மார்க்கின் ஸ்வென்ட்போர்க்சுண்ட் (Svendborgsund channel) நுழைவதை ஆய்வாளர்கள் இனங்கண்டுள்ளனர். ஆனால் இந்த வகை இனங்கள் அங்கு நுழைவது இல்லை.
அத்துடன் இந்த வகையான டால்பின்கள் நம்பமுடியாத அளவு சமூக தொடர்போடு இருப்பதாகவும் விசில் அடிப்பதன் மூலம் கருத்துக்களை பரிமாறி கொள்வதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் டெல்லே தனியாக விசில் அடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நீருக்கடியில் டால்பின்கள் வாழும் முறையை ஆய்வு செய்ய முற்பட்டுள்ளனர். இதன்போது தனிமையில் இருக்கும் டால்பின் மிகவும் அரட்டையடிப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
ஆனால் அந்த டால்பின் தனியாக தனக்கு தானே பேசிக்கொள்வதாக கூறப்படுகிறது. ஏன் என்றால் அதனுடன் பேசுவதற்கு பிற டால்பின்கள் அங்கு இல்லை என்பதால் அது தனது நடத்தையை மாற்றிக்கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.