பொழுதுபோக்கு

தேதி குறிச்சாச்சி… பத்திரிகை அடிச்சாச்சி… கல கட்டும் திருமண கொண்டாட்டம்

நாக சைதன்யா – சோபிதா துலிபாலா ஜோடியின் திருமணம் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. திருமண தேதி நெருங்கி வருவதால் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

திருமண அழைப்பிதழுடன் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. நாக சைதன்யா-சோபிதா ஜோடியின் திருமண அழைப்பிதழ் குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

திருமண அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அதில் மணமகன் நாக சைதன்யாவின் தாயுடன், மாற்றாந்தாய் மற்றும் தந்தையின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. நாக சைதன்யா, நாகார்ஜுனா மற்றும் அமலாவின் மகன் என்று அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு கீழே சரத் விஜயராகவன் மற்றும் லட்சுமி கமலா ஆகியோர் பெயர் அச்சிடப்பட்டுள்ளது. நாக சைதன்யாவிற்கு அமலா மாற்றாந்தாய், சரத் மாற்றாந்தந்தை ஆவார். மேலும், அழைப்பிதழில் ANR தம்பதியினர் மற்றும் D. ராமானாயுடு தம்பதியினரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

நாக சைதன்யாவிற்கு இது இரண்டாவது திருமணம் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் நடிகை சமந்தாவை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2021 இல் பிரிந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 13 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்