இலங்கை பொதுத் தேர்தல் முடிவுகள்: நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறிய பல முன்னாள் அமைச்சர்கள்
2024 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பல முன்னாள் அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் இடம் பெறத் தவறியுள்ளனர்.
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தனது கட்சிக்கு ஹம்பாந்தோட்டையில் ஒரு ஆசனம் கிடைக்காததால் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரும் காலியில் தமது கட்சிக்கு ஆசனம் கிடைக்காததால் பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ளனர்.
கடந்த அரசாங்கத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக கடமையாற்றிய காஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்கவைக்க தவறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 2000 ஆம் ஆண்டு முதன் முதலாக பாராளுமன்றத்தில் பிரவேசித்து இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சேவையாற்றிய அவர், 24 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.
ராஜபக்சவின் வாரிசும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சஷீந்திர ராஜபக்ச, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.
ராஜபக்ச குடும்ப உறவினரும், 2020 நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளருமான நிபுன ரணவக்க, இம்முறை ஆசனத்தைப் பெறத் தவறிவிட்டார்.
இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தில் சரவஜன பலய கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேனவும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெறத் தவறியுள்ளார்.
மேலும், முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க- களுத்துறை மாவட்டம்
முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன அனுராதபுரம் மாவட்டம்
முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க – அனுராதபுரம்
முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி – இரத்தினபுரி
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய – கேகாலை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் – மாத்தளை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க – மாத்தளை
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டி.எம்.தில்ஷான்
பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகளும் இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தில் ஆசனங்களைப் பெறத் தவறியுள்ளனர்.