பொழுதுபோக்கு

விஜய் டிவி சீரியல்களை ஓட விட்ட சன் டிவி சீரியல்கள்… தப்பித்து வரும் முத்து – மீனா

சீரியல்கள் என்றாலே அது சன் டிவி தான் என்று இருந்த நிலையில், விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது.

வாரத்தில் 5 நாட்கள் ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் தற்போது 7 நாட்களும் ஒளிபரப்பப்படுகிறது. இந்த சீரியல்களின் வரவேற்பை தீர்மானிப்பது டிஆர்பி ரேட்டிங் தான்.

அந்த வகையில் இந்த ஆண்டின் 45-வது வாரத்திற்கான டாப் 10 டிஆர்பி பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்த பட்டியலில் கடந்த வாரம் 10வது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலை பின்னுக்கு தள்ளி உள்ள ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியல், 5.59 டிஆர்பி புள்ளிகளுடன் 10ம் இடத்தை பிடித்திருக்கிறது.

கடந்த வாரம் 9-ம் இடத்தில் இருந்த கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரமும் 6.12 டிஆர்பி புள்ளிகளுடன் அதே இடத்தில் நீடிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது.

இந்த சீரியலுக்கு 6.45 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது. டாப் 10ல் உள்ள ஒரே ஒரு விஜய் டிவி சீரியலும் இதுதான்.

கடந்த வாரம் சன் டிவியில் தொடங்கப்பட்ட ரஞ்சனி சீரியல் முதல் வாரமே சக்கைப்போடு போட்டு டிஆர்பி ரேட்டிங்கில் 7-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 6.87 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருக்கிறது.

கடந்த வாரம் 6-ம் இடத்தில் இருந்த சன் டிவியின் இராமாயணம் சீரியல் இந்த வாரமும் 8.22 டிஆர்பி புள்ளிகளுடன் அதே இடத்தை தக்கவைத்து உள்ளது. அடுத்ததாக பிக்பாஸ் பிரபலம் கேபி நடித்துள்ள மருமகள் சீரியல் 8.70 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது.

கடந்த வாரம் 5-வது இடத்தில் இருந்த சன் டிவியின் சுந்தரி சீரியல், இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 8.80 டிஆர்பி புள்ளிகளுடன் 4-ம் இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரம் முதல் மூன்று இடங்களை பிடித்த கயல், மூன்று முடிச்சு மற்றும் சிங்கப்பெண்ணே ஆகிய சீரியல்கள் இந்த வாரமும் அதே இடங்களை தக்க வைத்து உள்ளன.

இதில் 3ம் இடத்தில் உள்ள சிங்கப்பெண்ணேவுக்கு 9.06 புள்ளிகளும், 2ம் இடத்தில் உள்ள மூன்று முடிச்சு சீரியலுக்கு 9.57 புள்ளிகளும், முதலிடத்தில் உள்ள கயல் சீரியலுக்கு 10.02 புள்ளிகளும் கிடைத்துள்ளது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!