பொழுதுபோக்கு

“இனிமேல் என்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்” – கமல் ஹாசன் எடுத்த திடீர் முடிவு!

“இனிமேல் என்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்” என்று நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமல் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

நான்கு வயதில் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன். அதில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான ராஷ்டிரபதி பவன் விருதும் பெற்றார் அவர். அன்று தொடங்கிய அவரின் திரைப்பயணம், தற்போது அவரது 70வது வயதிலும் நிற்காமல் நீடிக்கிறது. அந்தவகையில் பல்வேறு அசத்தலான கதாபாத்திரங்களில் நடித்து, சினிமாதான் தனது உலகம் என்பதை நிரூபிக்கும் விதமாக, எண்ணிலடங்கா சாதனைகளை நிகழ்த்தி சரித்திர நாயகனாக மிரட்டிக் கொண்டிருக்கிறார் கமல்.

வெற்றியானாலும், தோல்வியானாலும் தன் படைப்புகளுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தின் மூலம், கலைத்துறையின் கலங்கரை விளக்கமாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் கமல்ஹாசனுக்கு ‘உலக நாயகன்’ என்ற பட்டம் அவரின் ரசிகர்களால் 10-15 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில்தான், “சினிமாக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன்தான் நான். எனவே, என்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்” என திரைத்துறையினர், ரசிகர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு தற்போது கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

See also  கங்குவா நாயகி பெற்ற சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

Happy Birthday Kamal Haasan: Ten lesser known facts about the legend as he  turns 65 | Bollywood - Hindustan Times

இது குறித்தான பதிவில், “உயிரே உறவே தமிழே, வணக்கம். என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன் உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன்.

உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு. சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன்தான் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது.

திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது. கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. கொண்டு அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது.

See also  பிறந்தநாளை மோசமாக கொண்டாடிய பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா

Vikram (1986) - IMDb

மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது.எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன்.

இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். சக மனிதன் என்கிற ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content