பொழுதுபோக்கு

பாக்கியாவுக்கு விமோசனம்… 5 வருட அழுகைக்கு விடிவுகாலம்

கடந்த ஐந்து வருடங்களாக இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த பாக்கியலட்சுமி சீரியல் ஒரு காலத்தில் குடும்பத்துடன் சேர்ந்து பெண்கள் மற்றும் ஆண்கள் என பார்த்து விமர்சனம் செய்யக்கூடிய அளவிற்கு பாக்கியலட்சுமி சீரியல் வெற்றி பெற்றது.

ஆனால் தொடர்ந்து அரைச்ச மாவை அரைக்கும் விதமாக கதையே இல்லாமல் உருட்டிக் கொண்டு வருவதால் மக்களுக்கு வெறுப்பாகிவிட்டது.

அதிலும் கோபி நடிப்பு வரவர வன்மத்தைக் காக்கும் அளவிற்கு ரொம்பவே சைக்கோ தனமாக இருப்பதால் இந்த நாடகத்தை பார்ப்பதை குறைத்து விட்டார்கள். அதிலும் அந்த நாடகத்துக்கு பில்லர் ஆக இருந்த ராமமூர்த்தியின் கதையை க்ளோஸ் பண்ணிவிட்டு அவருக்கு செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்களை நிஜத்தில் செய்வது போல் ஒன்று விடாமல் செய்து பார்ப்பவர்களை கண்கலங்க வைத்து விட்டது.

அந்த வகையில் விஜய் டிவி டிஆர்பிக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போக தயங்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு நிரூபித்து விட்டார்கள். அப்படி இருந்தும் தற்போது கதை எதுவும் இல்லாததால் டிஆர்பி ரேட்டிங்கில் பின்னடைவை சந்தித்து விட்டது.

இதனால் விஜய் டிவி எடுத்த அதிரடியான முடிவு என்னவென்றால் இந்த நாடகத்தை இப்பொழுதே க்ளோஸ் பண்ணலாம் என்று சேனல் தரப்பில் இருந்து சொல்லி விட்டார்கள்.

ஆனால் தற்போது கோபி பக்கம் செழியன் மற்றும் இனியா சாய்ந்து விட்டார்கள். அடுத்ததாக எழிலை கவுக்கவும், பாக்யாவை பழிவாங்கவும் கோபி பிளான் போட்டிருக்கிறார்.

இந்த தருணத்தில் சீரியலை முடித்து விட சேனல் சொல்லியதால் அடுத்தடுத்து சில காட்சிகளை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக எல்லாம் பாக்யாவுக்கு பாசிட்டிவாக நடக்கப்போகிறது.

அந்த வகையில் கிளைமேக்ஸ் கிட்ட நெருங்கப் போவதால் பாக்யாவிற்கு கோபிடமிருந்து ஒரு வழியாக விமோசனம் கிடைக்கப் போகிறதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!