இலங்கை செய்தி

இலங்கையில் கோர விபத்தில் உயிரிழந்த மாணவிகள் தொடர்பில் வெளியான தகவல்

பதுளையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த இரு மாணவிகளும் தலையில் பலத்த காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவிகளில் ஒருவர் நிவிதிகல பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இசுரி உமயங்கனி எனவும் மற்றைய மாணவி குருநாகல் பகுதியை சேர்ந்த தரங்க ஹெட்டிமுல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்த இரு மாணவிகளின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்த மாணவிகளின் இறுதிக் கிரியைகள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பூரண அனுசரணையில் இடம்பெறும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பதுளை – மஹியங்கனை வீதியின் அம்பகஹஓயாவில் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தின் அளவீட்டுத் துறையில் மாணவர்கள் குழுவொன்று பயணித்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பதுளை – பசறை பிரதேசத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த 36 மாணவர்கள் உட்பட 41 பேர் உடனடியாக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(Visited 221 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை