உலகம்

22 நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

எதிர்வரும் 6 மாதங்களுக்கு 22 நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என, ஐ.நா. ஆய்வு ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன.

காலநிலை மாற்றம், போர் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் வரையிலும் பசிபிக் கடலில் லா நினா என்ற கடலியல் மாற்றம் இருக்கும் என்பதால், காலநிலை மாற்றம் ஏற்பட்டு வேளாண் பொருள் உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சூடான், பாலஸ்தீன், ஹைதி, மாலி, லெபனான், மியான்மர், மொசாம்பி, நைஜீரியா, சிரியா, ஏமன் மிகவும் உச்சபட்ச உணவுப் பஞ்சத்தில் தவிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

சோமாலியா, கென்யா, லெசோதோ, நமீபியா, நைகர், பர்கினா பாஸோ, எத்தியோப்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் உணவுப் பஞ்சத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கும் என்றும் ஐ.நா. ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

(Visited 2 times, 2 visits today)
See also  சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content