பாலஸ்தீன மக்களுக்கு 30 டன் மருந்துகள் அனுப்பி வைத்துள்ள இந்தியா
இந்தியாவிலிருந்து புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள், அத்தியாவசிய மருந்துகள் உள்பட 30 டன் அளவிலான மருத்துவ உதவிகள் பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மனிதாபிமான ரீதியிலான உதவியாக பாலஸ்தீன மக்களுக்காக 30 டன் அளவிலான அத்தியாவசிய மருந்துகள், புற்றுநோய் சிகிச்சை மருந்துகள் உள்ளடங்கிய மருத்துவப் பொருள்கள் பாலஸ்தீனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன,” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த வாரம் பாலஸ்தீனத்துக்கு இந்தியாவிலிருந்து 30 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)