சர்ச்சையை கிளப்பிய ஓவியாவின் அந்தரங்க வீடியோ… வெளியிட்டது இவர் தானா?
																																		சற்குணம் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான களவாணி படத்தில்தான் ஓவியா ஹீரோயினாக அறிமுகமானார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து ஓவியா பிஸியான நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.
அதன்படி மெரீனா, மூடர் கூடம், மதயானை கூட்டம், கலகலப்பு, முத்துக்கு முத்தாக என ஏராளமான படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் ஓரளவு பிஸியான நடிகையாகத்தான் வலம் வந்தார்.
ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை திடீரென அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதனையடுத்து தமிழில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
அந்த சீசனில் ஓவியாவின் பேச்சு, செயல்பாடு என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது. சக்தியுடன் சண்டைக்கு போனது, ஜூலியை வைத்து செய்தது என அவர் அதகளம் செய்தார். அதனைத் தொடர்ந்து ஓவியா ஆர்மியும் ஆரம்பிக்கப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தனது சினிமா கரியருக்கு நிச்சயம் உதவும் என்று நம்பினார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை.
இதற்கிடையே ஓவியாவின் ஓபன் பேச்சும் பலரை ரசிக்க வைத்தது. பல பேட்டிகளில் தனது மனதில் பட்டதை சட்டென்று சொல்லிவிடுபவர் அவர்.
சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ஓவியாவின் வீடியோ என ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதனை நெட்டிசன்ஸ் பலரும் ட்ரெண்டாக்கினர். நெட்டிசன் ஒருவர் ஓவியாவின் போஸ்ட் ஒன்றில் வீடியோ பற்றி நக்கலாக பேச; அதற்கு ஓவியாவோ தரமான பதிலடியை கொடுத்தார். ஓவியாவின் பதிலடிக்கு பலரும் தங்களது ஆதரவை கொடுத்தார்கள்.
இந்நிலையில் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், “ஓவியாவின் வீடியோவை வெளியிட்டவர் தாரிக்தான். அவரும், ஓவியாவும் பல முறை டேட்டிங் செய்திருக்கிறார்கள். அப்படி ஒரு டேட்டிங்கின்போதுதான் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. முதலில் இந்த வீடியோ வெளியானபோது நான்தான் என்று சொன்னார். பிறகு வீடியோ தொடர்பாக புகார் அளித்தார்.
அந்தப் புகாருக்கு அடுத்தபடியாக தாரிக்கை தேடி காவல் துறை சென்றது. ஆனால் அவர் இப்போது இந்தியாவில் இல்லை. துபாய்க்கு சென்றுவிட்டார். அதேபோல் ஓவியாவும் பாங்காக்குக்கு சென்று நடனமாடி வீடியோவை வெளியிட்டிருக்கிறார். சொல்லப்போனால் ஓவியாவுக்கு மன உளைச்சல் வந்து பிறகு மன பிறழ்வாகி இப்போது மன நோயாகிவிட்டது” என்றார்.

        



                        
                            
